நாட்டுக்கோழி நல்லெண்ணெய் வறுவல்



என்னென்ன தேவை?

நாட்டுக்கோழி - 1/4 கிலோ,
சின்ன வெங்காயம் - 200 கிராம்,
பச்சைமிளகாய் - 3,
மஞ்சள் தூள் - 10 கிராம்,
காய்ந்தமிளகாய் - 20 கிராம்,
தனியா - 30 கிராம்,
சீரகம் - 20 கிராம்,
சோம்பு - 10 கிராம், பட்டை - 1 துண்டு,
ஏலக்காய் - 4,
கிராம்பு - 6,
இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 5,
நல்லெண்ணெய் - 200 கிராம்,
உப்பு, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

நாட்டுக்கோழி, சின்ன வெங்காயம், பச்சைமிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி பூண்டை அரைத்துக் கொள்ளவும். எண்ணெயில்லாமல் வெறும் கடாயில் காய்ந்தமிளகாய், தனியா, சீரகம், சோம்பு, மிளகு, பட்டை, ஏலக்காய், கிராம்பு வறுத்து பொடித்து கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெயை ஊற்றி சூடானதும் சின்ன வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, சிக்கன், மஞ்சள் தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். கறி வெந்ததும் இஞ்சி பூண்டு விழுது, மசாலா பொடி சேர்த்து கிளறி மிதமான தீயில் வைத்து வறுவலாக வந்ததும் எடுத்து பரிமாறவும்.