இறைச்சி நல்லெண்ணெய் வறுவல்



என்னென்ன தேவை?

எலும்பு நீக்கிய ஆட்டு இறைச்சி - 1/4 கிலோ,
சின்ன வெங்காயம் - 200 கிராம்,
தக்காளி - 1,
பச்சைமிளகாய் - 3,
நறுக்கிய இஞ்சி - 1 துண்டு,
நறுக்கிய பூண்டு - 5 பல்,
காய்ந்தமிளகாய் - 20 கிராம்,
தனியா - 30 கிராம்,
சீரகம் - 20 கிராம்,
சோம்பு - 20 கிராம்,
பட்டை - 1 துண்டு,
ஏலக்காய் - 3,
கிராம்பு - 5,
நல்லெண்ணெய் - 200 மி.லி.,
உப்பு - தேவைக்கு,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது.

எப்படிச் செய்வது?

மட்டன் மற்றும் காய்கறிகளை சிறு துண்டுகளாக நறுக்கவும். சிறு தீயில் வெறும் கடாயில் காய்ந்தமிளகாய், தனியா, சீரகம், சோம்பு, மிளகு வறுத்து ஆறியதும் மிக்சியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெயை ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு தாளித்து வெங்காயம், பூண்டு போட்டு பொன்னிறமாக வதக்கி, தக்காளி, இஞ்சி, பச்சைமிளகாய் போட்டு வதக்கவும். இத்துடன் மட்டன், சிறிது தண்ணீர் சேர்த்து வதக்கி, அரைத்த மசாலா, உப்பு போட்டு மட்டன் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும். மட்டன் வெந்து நன்கு சுருண்டு வறுவலாக வந்ததும் இறக்கி பரிமாறவும்.