குளிர்காலத்துக்கான சுவையான சமையல்குளிர்காலம் வந்தாலே சூடாக, காரசாரமாக எதாவது சாப்பிட வேண்டும் என்று நினைப்பது நம் இயல்பு. அதிலும் நான்வெஜ் இருந்தால் கேட்கவே வேண்டாம்... அசைவப் பிரியர்களுக்கு பெரும் குஷி தான். நம் குங்குமம் தோழி வாசகர்களுக்காக நம்மூர் அசைவ வகைகளை நமக்காக செய்து காட்டி அசத்தி இருக்கிறார் கார்ப்பரேட் செஃப் பி.எம்.சாமி. தென்னிந்திய அசைவ உணவுகளின் ஸ்பெஷலிஸ்ட் இவர்.

தென்னிந்திய இனிப்பு வகைகள் செய்வதிலும் கை தேர்ந்தவரான இவர் நமக்காக ஒரு சில இனிப்பு வகைகளையும் இங்கே செய்து காட்டி இருக்கிறார். பெஸ்ட் சாய்ஸ் சென்னை மற்றும் சென்னை செட்டி விலாஸ் என்ற இரண்டு ரெஸ்டாரென்டுகளின் ஹெட் செஃப் இவர்தான். இருபது வருடங்களாக இங்கே பணிபுரியும் இவரின் சமையல் அனுபவம் மொத்தம் முப்பதாண்டு கள். எளிய முறையில் இவர் வழங்கி இருக்கும் சமையல் முறைகளை பயன்படுத்தி சமைத்து சாப்பிட்டு அடுத்தவர்களுக்கும் கொடுத்து இந்த குளிர்காலத்தை என்ஜாய் பண்ணுங்க.

தொகுப்பு: ஸ்ரீதேவி மோகன்
எழுத்து வடிவம்: கே.கலையரசி