ராகி சேமியா கேரட், கோஸ் அடை



என்னென்ன தேவை?

ராகி சேமியா - 100 கிராம்,
நறுக்கிய கேரட், கோஸ் - 1/2 கப்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
பெருங்காயத்தூள் - சிறிது.

அரைக்க...

பச்சரிசி - 100 கிராம்,
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 50 கிராம்,
காய்ந்தமிளகாய் - 8.

எப்படிச் செய்வது?

சுடுநீரில் உப்பு, எண்ணெய், ராகி சேமியாவை சேர்த்து வடித்து உதிர்க்கவும். அரைக்கக் கொடுத்தவற்றை அரைமணி நேரம் ஊறவிட்டு கரகரவென அரைத்து, ராகி சேமியா, நறுக்கிய காய்கறிகள், பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து, சூடான தோசைக்கல்லில் கனமான அடைகளாக ஊற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.