தினம் ஒரு சுவை... ஒவ்வொன்றும் தனி சுவை!



‘காலை உணவை தவிர்க்காதீர் கள்’ என மருத்துவர்கள் முதல் வீட்டுப்பெரியவர்கள் வரை அனைவரும் சொல்லும் அறிவுரை இது. காலை உணவை தவிர்க்க ஒரு முக்கியக் காரணம், நேரமின்மை. இந்த நேரமின்மையை சமாளிக்க வீட்டில் அத்தனை பேரும் முயன்றாலும், அது நாள்தோறும் சவாலாகவே இருக்கிறது. சுவையான, எளிதில் சமைக்கக்கூடிய, நேரத்தை மிச்சப்படுத்தக்கூடிய, அதே சமயம் ஆரோக்கியமாகவும் காலை உணவு அமைந்து விட்டால், அதுவே வாழ்நாள் வரம்தான்.

ஒவ்வொரு வீட்டிலும் காலை உணவை எளிமையாக்கவும் ஆரோக்கியமாக்கவும் வருகிறது சேமியா வகைகள். தினை, கம்பு, சோளம், வரகு, கோதுமை, ராகி எனப் புதிய சிறுதானிய வகைகளை அறிமுகப்படுத்துகிறது நிறுவனங் கள். இதனுடன் வெரைட்டியாக ருசிக்கவும் கற்றுத் தருகிறது. ஆம்… லெமன் சேமியா, டேமரிண்ட் சேமியா போன்ற சுவைகளையும் நீங்கள் ருசிக்கலாம். ஒவ்வொரு நாளும் ஒரு சுவை, ஒவ்வொன்றும் தனி சுவை… இனி காலைப் பொழுது இனிதாகும், ஆரோக்கியமாகும்.

அடம் பிடிக்கும் குழந்தை களை எளிதில் சாப்பிட வைக்க அசத்தலான பல சுவைகளில் சேமியா வகைகள் உள்ளன.சேமியா என்றதுமே நமக்குத் தெரிந்தவை உப்புமா, கிச்சடி, கேசரி, பாயசம் ஆகியவைதான். ஆனால், இந்தச் சேமியாவை வைத்து இத்தனை வெரைட்டியில் சமைக்க முடியும். சுவையான முறையில், எளிமையான முறையில் செய்ய முடியும் என நமக்கு எடுத்துக் காட்டுகிறார் சமையல்கலை நிபுணரான லஷ்மி ஸ்ரீநிவாசன்.

தொகுப்பு: ஸ்ரீதேவி மோகன்
எழுத்து வடிவம்: கே.கலையரசி
படங்கள்: எம்.உசேன்