சோட்டா பூந்திஎன்னென்ன தேவை?

கடலை மாவு - 200 கிராம்,
சர்க்கரை - 200 கிராம்,
அரிசி மாவு - 30 கிராம்,
முந்திரி, பாதாம் - தலா 5,
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,
தண்ணீர் - 100 மி.லி.,
குங்குமப்பூ - 2 சிட்டிகை,
பால் - 50 மி.லி.,
உப்பு - 1 சிட்டிகை,
நெய் - 200 மி.லி.,
உலர்ந்த திராட்சை - 2 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

நான்ஸ்டிக் தவாவில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பாகு பதத்திற்கு காய்ச்சிக் கொள்ளவும். சிறிது சூடான பாலில் குங்குமப்பூவை கரைத்து வைத்துக் கொள்ளவும். கடலை மாவு, அரிசி மாவை ஒன்றாக கலந்து, பால் ஊற்றி கட்டியில்லாமல் தோசை மாவுப் பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். அதில் குங்குமப்பூ கரைசலையும் சேர்த்து கலந்து வைக்கவும்.

கடாயில் நெய்யை சூடாக்கி சிறிய ஓட்டையுள்ள அரிக்கரண்டியில் மாவை ஊற்றி அதன் மீது கரண்டி அல்லது ஸ்பூன் கொண்டு தேய்க்கவும். நெய்யில் விழும் பூந்தியை பொரித்தெடுத்து சர்க்கரை பாகில் போடவும். மீதியுள்ள நெய்யில் பொடித்த பாதாம், முந்திரி, திராட்சையை பொன்னிறமாக வறுத்து, சர்க்கரைப்பாகு பூந்தியில் கொட்டி கலந்து அலங்கரித்து 20 நிமிடங்கள் கழித்து பரிமாறவும்.

குறிப்பு: கடலை மாவில் பாலை ஊற்றிக் கரைப்பதால் பூந்தி பொரிக்கும்போது உடனே சிவந்து விடும். ஆகவே சிவக்கும் முன்பு பொரித்தெடுக்கவும்.