பெங்காலி பிர்னி



என்னென்ன தேவை?

அரிசி மாவு - 100 கிராம்,
பால் - 750 மி.லி.,
பிஸ்தா - 3, பாதாம் - 5,
சர்க்கரை - 100 கிராம்,
நெய் - 1 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

நான்ஸ்டிக் தவாவில் அரிசி மாவை போட்டு மிதமான தீயில் மாவின் நிறம் மாறாமல் வறுக்கவும். அதில் பாலை ஊற்றி கட்டியில்லாமல் 5 நிமிடங்கள் கிளறி, சர்க்கரை சேர்த்து கிளறவும். அதிகம் கெட்டியாக இல்லாமல் குடிக்கும் பதத்திற்கு வந்ததும் இறக்கவும். கடாயில் நெய்யை ஊற்றி சூடாக்கி பொடித்த பாதாம், பிஸ்தாவை வறுத்து, பிர்னியில் கொட்டி கலந்து சூடாகவோ அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்றோ பரிமாறவும்.

குறிப்பு : தேவையெனில் ரோஸ் அல்லது வெனிலா எஸென்ஸ் சேர்க்கலாம்.