அரைத்து விட்ட காரக்குழம்புஎன்னென்ன தேவை?

பூண்டு - 1/4 கப்,
சாம்பார் வெங்காயம் - 10,
மணத்தக்காளி வற்றல் - 5 டேபிள்ஸ்பூன்,
கடுகு, வெந்தயம், மஞ்சள் தூள் - தலா 1 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 3 டேபிள்ஸ்பூன்,
திக்கான புளிக்கரைசல் - 1 கப்,
காய்ந்தமிளகாய் - 1,
குழம்பு வடகம் சிறியது - 1,
வெல்லத்துருவல், எண்ணெய் - தலா 1 டேபிள்ஸ்பூன்,
நல்லெண்ணெய் - 6 டேபிள்ஸ்பூன்,
அரைக்க தேங்காய்த்துருவல் - 1/2 கப்,
உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

அடிகனமான கடாயில் நல்லெண்ணெயை ஊற்றி கடுகு, காய்ந்தமிளகாய், வெந்தயம், குழம்பு வடகம் தாளித்து, பூண்டு, வெங்காயத்தை வதக்கி, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, புளிக்கரைசல், 1 கப் தண்ணீர் ஊற்றி வெல்லம் சேர்த்து மூடி வைக்கவும். பாதி சுண்டி வந்ததும், மற்றொரு கடாயில் எண்ணெயை ஊற்றி மணத்தக்காளி வற்றலை வறுத்து குழம்பில் கொட்டவும். அனைத்தும் சேர்ந்து வரும்பொழுது தேங்காய்த்துருவலை அரைத்து கொட்டி கலந்து, 2 கொதி வந்ததும் இறக்கி, சாதத்துடன் சூடாக பரிமாறவும்.