போளிஎன்னென்ன தேவை?

மேல் மாவிற்கு...

மைதா மாவு - 1 கப்,
வெள்ளை ரவை - 3  டேபிள்ஸ்பூன்,
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
லெமன் ஃபுட் கலர் - 1 டீஸ்பூன்,
நெய் - தேவைக்கு.

பூரணத்திற்கு...

தேங்காய்த்துருவல் - 1 கப், துருவிய வெல்லம் - 1½ கப், ஏலப்பொடி - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

மேல் மாவிற்கு கொடுத்ததை தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவை விட சற்று தளர்த்தியாக பிசைந்து 1/2 மணி நேரம் ஊற விடவும். ஒரு  அடி கனமான பாத்திரத்தில் வெல்லத்துருவல், தண்ணீர் 1/4 கப் ஊற்றி கொதிக்க விட்டு ஆறியதும் வடிகட்டவும். மீண்டும் அடுப்பில் வைத்து தேங்காய்த்துருவல், ஏலப்பொடி சேர்த்து கிளறவும்.

அனைத்தும் சேர்ந்து உருட்டும் பதம் வந்ததும் இறக்கவும். பூரணம் ெரடி. மாவில் இருந்து சிறு உருண்டையளவு எடுத்து வாழை இலையில் தட்டி நடுவில் ஒரு உருண்டை பூரணம் வைத்து மூடி, கைகளால் தட்டி சூடான தவாவில் போட்டு நெய் விட்டு ஒரு புறம் வெந்ததும், திருப்பி போட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.