தேங்காய்ப்பொடிஎன்னென்ன தேவை?

தேங்காய்த்துருவல் - 2 கப்,
உப்பு - தேவைக்கு,
காய்ந்தமிளகாய் - 3,
பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 6 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் தேங்காய்த் துருவலை ஈரம் போக வறுத்து தனியே வைக்கவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்தமிளகாய், பெருங்காயத்தூள், உளுத்தம்பருப்பு அனைத்தையும் வறுத்து ஆற வைத்து, உப்பு சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இத்துடன் தேங்காய்த்துருவலையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். கடாயில் பொடித்த தேங்காய் பொடியைப் போட்டு ஒரு முறை புரட்டி எடுத்து, இட்லி, தோசையுடன் பரிமாறவும். 1 வாரம் வரை கெடாமல் இருக்கும்.