தேங்காய்ப்பால் மகிழம்பூஎன்னென்ன தேவை?

பச்சரிசி - 4 கப்,
பயத்தம்பருப்பு - 1 கப்,
உளுத்தம்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்,
பட்டன் கற்கண்டு - 3 டேபிள்ஸ்பூன்,
தேங்காய்ப்பால் - 2 கப்,
உப்பு, பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் பயத்தம் பருப்பு, உளுத்தம்பருப்பு இரண்டையும் லேசாக வறுத்து ஆறவைக்கவும். அரிசி, பருப்பு வகைகளை சேர்த்து மிஷினில் கொடுத்து நைசாக அரைத்து கொள்ளவும். கற்கண்டை சிறிது நீரில் கரைத்து கொள்ளவும். பாத்திரத்தில் மாவு, உப்பு, கற்கண்டு தண்ணீர், தேங்காய்ப்பால் அனைத்தையும் சேர்த்து பிசையவும். தேவையானால் சிறிது தண்ணீர் விட்டு பிசையலாம். முறுக்கு அச்சில் மகிழம்பூ அச்சினை போட்டு, மாவை வைத்து சூடான எண்ணெயில் பிழிந்து பொன்னிறமாக பொரித்தெடுத்து பரிமாறவும்.

குறிப்பு: தேங்காய்ப்பால் சேர்ப்பதால் மகிழம்பூ சற்று சிவந்த நிறத்துடன் இருக்கும்.