மணத்தக்காளி கீரை தண்ணிச்சாறு



என்னென்ன தேவை?

நறுக்கிய மணத் தக்காளிக்கீரை - 3 கப்,
தேங்காய்ப்பால் - 1 கப்,
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
நறுக்கிய சின்ன வெங்காயம் - 2 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

அடிகனமான பாத்திரத்தில் மணத்தக்காளிக் கீரை, 1 கப் தண்ணீர் ஊற்றி, வெங்காயம், உப்பு சேர்த்து வேக விடவும். வெந்ததும் மிளகுத்தூள், தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி, சாதத்துடன் பரிமாறவும்.