ரசமலாய்



என்னென்ன தேவை?

பால் - 500 மி.லி.,
பொடித்த சர்க்கரை - 100 கிராம்,
ஏலக்காய் - 5,
பனீர் - 100 கிராம்,
அலங்கரிக்க குங்குமப்பூ - 1 சிட்டிகை,
பிஸ்தா - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பனீரை துருவி சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி தட்டி வைக்கவும். பாலைக் காய்ச்சி ரபடி தயாரிக்கவும். சர்க்கரையை தண்ணீரில் கரைத்து சிரப் செய்யவும். உருண்டைகளாக உருட்டிய பனீரை சர்க்கரை சிரப்பில் சேர்த்து வேக விடவும். பிறகு ஆறியதும் ரபடியில் சேர்த்து குங்குமப்பூ, பிஸ்தா கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.