மட்டன் பிரியாணி



என்னென்ன தேவை?

பாஸ்மதி அரிசி - 1 கிலோ,
மட்டன் - 1 கிலோ,
பப்பாளி காய் - 1,
கொத்தமல்லித்தழை - 50 கிராம்,
புதினா - 50 கிராம்,
எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்,
பொன்னிறமாக வறுத்த வெங்காயம் - 200 கிராம்,
நெய் - 100 கிராம்,
உப்பு - தேவைக்கு,
மிளகாய்த்தூள் - 50 கிராம்,
மஞ்சள் தூள் - 20 கிராம்,
அடித்த தயிர் - 150 கிராம்,
ஏலக்காய் தூள் - 2 டீஸ்பூன்,
தனியா தூள் - 1½ டேபிள்ஸ்பூன்,
சீரகத்தூள் - 2 டீஸ்பூன்,
பட்டை - 4 துண்டுகள்,
ஏலக்காய் - 10,
கிராம்பு - 10,
கருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்,
கோவா - 100 கிராம்,
பால் - 150 மி.லி.,
சோள எண்ணெய் - 100 மி.லி.,
குங்குமப்பூ - 1 சிட்டிகை,
இஞ்சி பூண்டு விழுது - 5 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

மட்டன் துண்டுகளை இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லி, புதினா, பட்டை, கிராம்பு, கருஞ்சீரகம், பப்பாளி காய் விழுது எல்லாம் சேர்த்து கலந்து இரவு முழுக்க பிரிட்ஜில் வைக்க வேண்டும். மறுநாள் தயிருடன் எலுமிச்சைச்சாறு, வறுத்த வெங்காயம், நெய் சேர்த்து கலக்கவும். அரிசியை 1/2 மணி நேரம் ஊறவைத்து அரை வேக்காடு வேகவைக்கவும்.

மட்டன் துண்டுகளை பெரிய பாத்திரத்தில் போட்டு அதன் மேல் வேகவைத்த அரிசியை பரப்பவும். அதன் மேல் கொத்தமல்லி, புதினா மற்றும் வறுத்த வெங்காயத்தை சேர்க்கவும். குங்குமப்பூவை பாலில் கலந்து அரிசியின் மீது தெளித்து அதன் மேல் நெய் சேர்த்து, 45 நிமிடம் மூடி வைத்து சமைக்க வேண்டும். அவ்வப்போது கிளறி விட வேண்டும். கிளறும் போது அரிசி உடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெங்காய பச்சடியுடன் பரிமாறவும்.