உளுந்து களிஎன்னென்ன தேவை?

உளுந்து - 250 கிராம்,
வெந்தயம் - 10 கிராம்,
கருப்பட்டி - 300 கிராம்,
நல்லெண்ணெய் - 200 மி.லி.

எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் உளுந்து, வெந்தயம் வறுத்து பொடி செய்து, தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும். கடாயில் நல்லெண்ணையை காயவைத்து அரைத்த விழுதை போட்டு கிண்டவும். பாதி வெந்தவுடன் கருப்பட்டி பாகு சேர்த்து தளதளவென கிண்டி இறக்கவும்.