கொள்ளு வடைஎன்னென்ன தேவை?

கொள்ளு - 1/2 கிலோ,
உளுத்தம்பருப்பு- 100 கிராம்,
வெங்காயம் - 1/4 கிலோ,
சீரகம் - 4 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - தேவைக்கு,
பெருஞ்சீரகம் - 4 டீஸ்பூன்,
பூண்டு - 25 கிராம்,
இஞ்சி - 20 கிராம்,
புதினா, கொத்தமல்லி - சிறிது,
எண்ணெய், உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கொள்ளு, உளுத்தம்பருப்பை தனித்தனியாக நன்கு ஊறவைத்துக் கொள்ளவும். ஊறியதும் மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து அரைத்த மாவிலிருந்து சிறு உருண்டை எடுத்து வடைகளாக தட்டி பொன்னிறமாக பொரித்தெடுத்து பரிமாறவும்.