தூதுவளை இட்லிஎன்னென்ன தேவை?

பூங்கார் அரிசி - 4 குவளை,
உளுந்து - 1 குவளை,
வெந்தயம் - 1 டீஸ்பூன்,
தூதுவளை - 2 குவளை,
சீரகம் - 3 டீஸ்பூன்,
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பூங்கார் அரிசியை தனியாகவும், உளுந்துடன் வெந்தயம் சேர்த்தும் ஊற வைக்கவும். பின்பு இரண்டையும் தனித்தனியாக கிரைண்டரில் அரைத்து உப்பு சேர்த்து கலந்து 6 மணி நேரம் புளிக்க வைக்கவும். புளித்த மாவுடன் தூதுவளை கீரை, சீரகம், மஞ்சள் பொடி சேர்த்து அரைத்து இட்லிகளாக வேகவைத்து எடுத்து பரிமாறவும்.