தினை பாயசம்என்னென்ன தேவை?

தினை அரிசி - 1 குவளை,
சிறு பருப்பு - 1/4 குவளை,
வெல்லம் - 1¼ குவளை,
ஏலக்காய் - 4,
முந்திரி - 20 கிராம்,
நெய் - 100 கிராம்,
உலர் திராட்சை - 20 கிராம்,
தேங்காய்த்துருவல் - ஒரு கைப்பிடி.

எப்படிச் செய்வது?

நெய்யில் தினை அரிசியை நன்றாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் அதிக அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, அதில் சிறுபருப்பை போட்டு வேக வைக்கவும். சிறுபருப்பு நன்றாக வெந்ததும், வறுத்து வைத்திருக்கும் தினை அரிசியை சேர்த்து கொதிக்க விடவும். தினை அரிசி முக்கால் பாகம் வெந்ததும், பொடித்த வெல்லத்தை சேர்க்கவும். எல்லாம் கலந்து குழைவாக வரும்போது சிறிது நெய் சேர்க்கவும். கடைசியாக நெய்யில் வறுத்த முந்திரி, உலர்திராட்சை, தேங்காய்த்துருவல் சேர்த்து கலந்து பரிமாறவும்.