சாமை மிளகு பொங்கல்என்னென்ன தேவை?

சாமை - 200 கிராம்,
பாசிப்பருப்பு - 75 கிராம்,
மிளகு - 10 கிராம்,
சீரகம் - 10 கிராம்,
நறுக்கிய இஞ்சி - 5 கிராம்,
பெருங்காயம் - தேவைக்கு,
நெய் - 25 கிராம்,
முந்திரி - 10-20 கிராம்,
கடலை எண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு,
கறிவேப்பிலை - சிறிது.

எப்படிச் செய்வது?

சாமை அரிசியையும், பாசிப்பருப்பையும் தனித்தனியாக ஊறவைத்து குக்கரில் தனித்தனியாக வேக வைத்துக் கொள்ளவும். பருப்பை நன்கு குழைவாக வேகவைக்கவும். பின்பு சாமை அரிசி, பருப்பு இரண்டையும் சேர்த்து கலக்கவும். கடாயில் நெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை, மிளகு, சீரகம், இஞ்சி, முந்திரி போட்டு வறுத்து, பெருங்காயம் சேர்த்து, அதை அரிசி பருப்பு கலவையில் கொட்டி கலந்து சூடாக பரிமாறவும்.