குங் பாவ் வெஜிடபிள்



என்னென்ன தேவை?

கேரட் - 50 கிராம்,
கோஸ் - 100 கிராம்,
பீன்ஸ் - 25 கிராம்,
வெங்காயம் - 1,
புரொக்கோலி - 50 கிராம்,
ஸுக்கினி - 50 கிராம்,
பூண்டு, இஞ்சி, ஸ்ப்ரிங் ஆனியன், செலரி - தலா 1 டேபிள்ஸ்பூன்,
காய்ந்தமிளகாய் விழுது - சிறிது,
காய்ந்தமிளகாய் - 1,
வேர்க்கடலை - 50 கிராம்,
தேன் - சிறிது,
சோயா சாஸ் - சிறிது,
வினிகர் - சிறிது,
உப்பு, எண்ணெய், வெள்ளை மிளகுத்தூள் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

காய்கறிகள் அனைத்தையும் நறுக்கிக் கொள்ளவும். கேரட், கோஸ், பீன்ஸ், புரொக்கோலி, ஸுக்கினி ஆகியவற்றை தண்ணீரில் வேகவைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து வெங்காயம், பூண்டு, இஞ்சி, செலரியை வதக்கி, காய்ந்தமிளகாய் விழுது, சோயா சாஸ், வினிகர், நறுக்கிய காய்ந்தமிளகாய், உப்பு சேர்க்கவும். இதனுடன் வேகவைத்த காய்கறிகளை சேர்த்து கிளறி, உடைத்த வேர்க்கடலை, தேன், ஸ்ப்ரிங் ஆனியன் கலந்து சூடாக பரிமாறவும்.