வெஜ் ஸ்ப்ரிங் ரோல்



என்னென்ன தேவை?

ஸ்ப்ரிங் ரோல் சீட் - 3,
கேரட் - 50 கிராம்,
கோஸ் - 100 கிராம்,
பீன்ஸ் - 25 கிராம்,
பொடியாக நறுக்கிய குடைமிளகாய், பூண்டு, இஞ்சி, ஸ்ப்ரிங் ஆனியன் - தலா 1 டேபிள்ஸ்பூன்,
வெங்காயம் - 1,
பச்சைமிளகாய் - 1, 
மைதா - 25 கிராம்,
காய்ந்தமிளகாய் விழுது - சிறிது,
சோயா சாஸ், தக்காளி சாஸ், உப்பு, எண்ணெய், வெள்ளை மிளகுத்தூள் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

சாஸ் செய்ய...

கடாயில் எண்ணெயை காயவைத்து பூண்டு, வெங்காயத்தை வதக்கி, தக்காளி சாஸ், உப்பு, சிறிது சர்க்கரை, சோள மாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றி சாஸ் பதத்திற்கு வந்ததும் இறக்கவும். மற்றொரு கடாயில் எண்ணெயை காயவைத்து பூண்டு, இஞ்சி, வெங்காயம், கேரட், குடை மிளகாய், கோஸ் ஆகியவற்றை வதக்கி உப்பு, வெள்ளை மிளகுத்தூள், சோயா சாஸ் சேர்த்து கிளறி தனியாக வைக்கவும்.

பின்பு ஸ்ப்ரிங் ரோல் சீட்டை இரண்டாக வெட்டவும். அதில் இந்த காய்கறி கலவையை வைத்து, விரல் அளவிற்கு உருட்டி, மைதா மாவில் சிறிது தண்ணீர் கலந்து ஓரத்தில் பசை போல் ஒட்டி மூடி, சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுத்து, ஹாட் கார்லிக் சாஸுடன் சூடாக பரிமாறவும்.