வெஜிடபிள் ஃப்ரைடு ரைஸ்என்னென்ன தேவை?

பாஸ்மதி அரிசி - 150 கிராம்,
நறுக்கிய வெங்காயம் - 1 கப்,
கேரட், குடைமிளகாய் - தலா 1/2 கப்,
கோஸ் - 2 கப்,
பொடியாக நறுக்கிய இஞ்சி,
பூண்டு - 2 டீஸ்பூன்,
வெங்காயத்தாள் - 1 கப்,
வெள்ளை மிளகுத்தூள் - தேவைக்கு,
உப்பு - 2 டீஸ்பூன்,
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பாஸ்மதி அரிசியை உப்பு சேர்த்து வேகவைத்து உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு போட்டு வதக்கி, குடைமிளகாய், கேரட், கோஸ் சேர்த்து சிறிது வதக்கவும். பின்பு உப்பு, மிளகுத்தூள், சாதம் போட்டு நன்றாக கிளறவும். அப்போது அடுப்பை வேகமாக எரிய விட்டு நன்றாக கலந்து வாசனை வந்ததும் அடுப்பை நிறுத்தி இறக்கவும். வெங்காயத்தாள் தூவி சூடாக பரிமாறவும்.