கோல்டன் ஃப்ரைடு பேபிகார்ன்என்னென்ன தேவை?

பேபிகார்ன் - 5,
மைதா, சோள மாவு - தலா 25 கிராம்,
உப்பு, எண்ணெய், வெள்ளை மிளகுத்தூள் - தேவைக்கு,
மஞ்சள் ஃபுட் கலர் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பேபிகார்னை நீளவாக்கில் நான்கு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பாத்திரத்தில் சோள மாவு, மைதா, உப்பு, வெள்ளை மிளகுத்தூள், மஞ்சள் ஃபுட் கலர் கலந்து, சிறிது தண்ணீர் விட்டு கரைத்து, பேபிகார்ன் துண்டுகளை முக்கி  எடுத்து, சூடான எண்ணெயில் வறுத்து எடுத்து, தக்காளி சாஸுடன் பரிமாறவும்.