வெஜ் பால் மஞ்சூரியன்



என்னென்ன தேவை?

பொடியாக நறுக்கிய கேரட் - 50 கிராம்,
கோஸ் - 100 கிராம்,
பீன்ஸ் - 25 கிராம்,
வெங்காயம் - 1,
பச்சைமிளகாய் - 1,
குடைமிளகாய், பூண்டு, இஞ்சி, ஸ்ப்ரிங் ஆனியன் - தலா 1 டேபிள்ஸ்பூன்,
மைதா, சோள மாவு - தலா 25 கிராம்,
காய்ந்தமிளகாய் விழுது - சிறிது,
சோயா சாஸ், தக்காளி சாஸ், உப்பு, எண்ணெய், வெள்ளை மிளகுத்தூள் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் கேரட், கோஸ், பீன்ஸ், குடைமிளகாய், சோள மாவு, மைதா, உப்பு, வெள்ளை மிளகுத்தூள், சிறிது தண்ணீர் ஊற்றி பிசைந்து, சிறிய பந்து போல் செய்து எண்ணெயில் வறுத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து பூண்டு, இஞ்சி, வெங்காயம், சிறிது குடைமிளகாய் போட்டு வதக்கி, காய்ந்தமிளகாய் விழுது, சோயா சாஸ், தக்காளி சாஸ், உப்பு, வெள்ளை மிளகுத்தூள் மற்றும் வறுத்த வெஜ் உருண்டைகளை போட்டு கிளறி இறக்கவும். ஸ்ப்ரிங் ஆனியனை தூவி சூடாக பரிமாறவும்.