தயிர் மசாலா இட்லி



என்னென்ன தேவை?

இட்லி - 6,
தயிர் - 200 மி.லி.,
இஞ்சி + பச்சைமிளகாய் விழுது - 2 டீஸ்பூன்,
உப்பு, மஞ்சள் தூள் - தேவைக்கு.

தாளிக்க...

கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - தேவையான அளவு.

அலங்கரிக்க...

துருவிய கேரட், தேங்காய்த் துருவல், நறுக்கிய வெங்காயம், புதினா, கொத்தமல்லி அனைத்தும் சேர்த்து - 1 கப்.

எப்படிச் செய்வது?

இட்லியை 6 துண்டுகளாக போட்டு எண்ணெயில் பொரித் தெடுத்து கொள்ளவும். தயிரில் அரைத்த பச்சைமிளகாய், இஞ்சி விழுது, உப்பு, மஞ்சள் தூள், தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து தயிர் கலவையில் கொட்டி கலந்து கொள்ளவும். தட்டில் பொரித்த இட்லியை வைத்து, அதன் மேல் தயிர் கலவையை ஊற்றி, அலங்கரிக்க கொடுத்த பொருட்களால் அலங்கரித்து பரிமாறவும்.