தயிர் ரவை இட்லி



என்னென்ன தேவை?

கடைந்த தயிர் - 200 மி.லி.,
ரவை - 200 கிராம்,
உப்பு - தேவைக்கு,
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்,
ஆப்ப சோடா - 1 சிட்டிகை,
கேரட் துருவல் - 1/2 கப்.

தாளிக்க...

முந்திரி - 10,
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 4,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
நெய் - 50 கிராம்,
கறிவேப்பிலை - 1 ஆர்க்.

எப்படிச் செய்வது?

தயிரில் ரவை, உப்பு, பெருங்காயத்தூள் கலந்து 30-40 நிமிடம் ஊறவைத்து, ஆப்ப சோடா சேர்த்து கலக்கவும். கடாயில் நெய் விட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து, தயிர் ரவை கலவையில் கொட்டி கலக்கவும். இட்லி தட்டில் நெய் தடவி கலவையை ஊற்றி, அதன் ேமல் கேரட் துருவல் தூவி, 7-10 நிமிடம் வரை வேகவிட்டு எடுக்கவும். தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

குறிப்பு: அதிக நேரம் ஊற வைத்தாலும், மாவு கெட்டியாக இருந்தாலும், ரவை இட்லி கொழுக்கட்டை போல் ஆகி விடும்.