ஃப்ரைடு பின்டி பச்சடி (பொரிச்ச வெண்டைக்காய் பச்சடி)



என்னென்ன தேவை?

வெண்டைக்காய் - 1/4 கிலோ,
பச்சைமிளகாய் - 4,
கறிவேப்பிலை - 2 கொத்து,
எண்ணெய் - 100 மி.லி.,
கடைந்த தயிர் - 250 மி.லி.,
தாளிக்க கடுகு, உளுத்தம்பருப்பு,
பெருங்காயத்தூள், உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

வெண்டைக்காய், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து வெண்டைக்காய், பச்சைமிளகாயை பொரித்து எடுக்கவும். பின் கறிவேப்பிலையை பொரித்து எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் கடைந்த தயிர், உப்பு, பெருங்காயத்தூள், பொரித்த வெண்டைக்காய், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு கலந்து, மற்றொரு கடாயில் கடுகு, உளுந்து தாளித்து கொட்டி பரிமாறவும்.