தயிர் ஆலு மசால்



என்னென்ன தேவை?

தயிர் - (hung curd)200 மி.லி.,
உருளைக்கிழங்கு - 1/2 கிலோ,
நறுக்கிய வெங்காயம் - 1 கப்,
கொத்தமல்லி, கறிவேப்பிலை - 1/2 கப்,
தக்காளி - 2,
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - 50 மி.லி.,
உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து நறுக்கி கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து வெங்காயம், தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் போட்டு நன்கு வதக்கி, கரம்மசாலாத்தூள், உருளைக்கிழங்கு, 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு வதக்கவும். 10 நிமிடம் கழித்து தயிர், கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கவும். இட்லி, தோசை, சப்பாத்தி, பூரியுடன் பரிமாறவும்.

குறிப்பு: hung curd என்பது தயிரை ஒரு துணியில் கட்டி தொங்கவிட்டு, அதில் இருக்கும் தண்ணீர் எல்லாம் வடிந்து கெட்டியான தயிர் கிடைக்கும்.