சாமை பொங்கல்



என்னென்ன தேவை?

சாமை - 200 கிராம்,
கறிவேப்பிலை - சிறிது,
பாசிப்பருப்பு - 50 கிராம்,
தண்ணீர் - 750 மி.லி.,
மிளகு - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
சீரகம் - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
முந்திரி - 5-7.

எப்படிச் செய்வது?

சாமை அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் கழுவி ஒன்றாக சேர்த்து ஊற வைக்கவும். குக்கரில் ஊறிய அரிசி, பருப்பு, 750 மி.லி. தண்ணீர், உப்பு சேர்த்து வேக விடவும். கடாயில் எண்ணெய் விட்டு பொடித்த முந்திரி, மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, வெந்த சாமை பொங்கலில் கொட்டி நன்றாக கலந்து சூடாக பரிமாறவும்.