ஃப்ரூட் மிக்ஸ் அவல் பிரட்டல்
என்னென்ன தேவை?
ஆப்பிள் - 1, கொய்யாப்பழம் - 1, மட்ட அவல் - 200 கிராம், வாழைப்பழம் - 1, வெல்லம் - 200 கிராம், சுக்குத்தூள் - 1/4 டீஸ்பூன், மாதுளை முத்துக்கள் - 1/4 கப், தேன் - 2 டீஸ்பூன், உலர்ந்த திராட்சை - சிறிது.
எப்படிச் செய்வது?
பழங்களை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அவலை தண்ணீரில் 30 நிமிடங்கள் ஊறவைத்து பிழிந்து கொள்ளவும். பவுலில் அவல், கொய்யாப்பழம், ஆப்பிள், வாழைப்பழம், மாதுளை, உலர்ந்த திராட்சை, சுக்குத்தூள், தேன் ஊற்றி அனைத்தும் ஒன்றாக கலந்து பரிமாறவும்
குறிப்பு: அவலுக்கு பதில் ஓட்ஸ் பயன்படுத்தலாம்.
|