மிக்ஸ் நார்ச்சத்து ஃப்ரூட் சாலட்



என்னென்ன தேவை?

ஆரஞ்சு சுளை - 5,
பேரிக்காய் - 1,
உலர்ந்த அத்திப்பழம் - 5,
கொய்யாப்பழம் - 1,
வாழைப்பழம் - 2,
பேரீச்சம்பழம் - 3,
தேன் - 2 டீஸ்பூன்,
கிவி பழம் - 2,
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பழங்களை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பவுலில் வாழைப்பழம், கிவி பழம், ஆரஞ்சுசுளை, அத்திப்பழம், பேரிக்காய், கொய்யாப்பழம், பேரீச்சம்பழம் சேர்த்து கலந்து மிளகுத்தூள், தேன் ஊற்றி நன்கு கலந்து பரிமாறவும்.

குறிப்பு: மாம்பழம், சாத்துக்குடி, ஆப்பிள், நெல்லிக்காய், பழுக்காத கொய்யா, பப்பாளி மற்றும் காய்கறிகளிலும் சாலட் செய்யலாம்.