உடல் ஆரோக்கியம் பெற...



ஆரோக்கியமான இதயத்துக்கு நார்ச்சத்து உணவு மிகவும் முக்கியம். இதனால் இதயம் ஆரோக்கியம் பெறுவதுடன், இதய நோயிலிருந்து 40 சதவிகிதம் நம்மை காத்துக்கொள்ளலாம். மேலும் நார்ச்சத்துள்ள உணவுகள், தேவையற்ற கழிவுகளை உடலில் இருந்து வெளியேற்றுவதால் சருமம் எப்போதும் ஆரோக்கியத்துடன் இருக்கும். நார்ச்சத்துள்ள உணவை உண்பதால் பசியைக் குறைத்து வயிறு நிறைந்ததுபோல் இருக்கும்.

நம் உடலில் உள்ள சர்க்கரை மற்றும் ரத்தக் கொதிப்பின் அளவை குறைத்து மலச்சிக்கல் வராமலும் காக்கும். மலச்சிக்கல் பிரச்னையே மனிதனின் பாதி நோய்க்கு காரணமாகிறது. முக்கியமாக குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைத்து, உடல் எடை கூடாமல் சமன் செய்கிறது. அதேபோல் நார்ச்சத்துள்ள பழ வகைகளை கூடுமானவரை ஜூஸ் போடாமல் கடித்து மென்று சாப்பிட வேண்டும்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள முப்பது வகை நார்ச்சத்து ரெசிபிகளை தினமும் உணவில் ஏதேனும் இரண்டை செய்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம் என்கிறார் சமையல் கலைஞர் பிரியா பாஸ்கர். இவர் தொடர்ந்து ஆரோக்கியம் சார்ந்த உணவுகளின் செய்முறைகளை சில தமிழ் மாத இதழ்களில் எழுதி வருகிறார். தோழி வாசகிகளின் ஆரோக்கியத்திற்காக 30 வகை நார்ச்சத்து உணவுகளின் செய்முறை விளக்கத்தை இங்கு தந்துள்ளார்.

தொகுப்பு: ருக்மணிதேவி நாகராஜன்
எழுத்து வடிவம்: கே.கலையரசி