மிக்ஸ்டு நவ சிறுதானியம் பரோட்டா



மிக்ஸ்டு நவ சிறுதானிய மாவுக்கு...

சோளம், சாமை, வரகு, குதிரைவாலி, தினை, பனிவரகு - தலா 1/2 கப்,
கேப்பை (ராகி) - 1/2 கப்,
பாசிப்பயறு - 1/4 கப்,
அரிசி மாவு - 1/2 கப்.

மிக்ஸ்டு நவ சிறுதானிய மாவு செய்ய...

கேப்பையும், பாசிப்பயரையும் நன்றாக கழுவி முளைக் கட்டவும். முளைக்கட்டியதும் இரண்டையும் வெயி லில் நன்கு காய வைக்கவும். இத்துடன் மற்ற தானியங்களையும் ஒன்று சேர்த்து மிஷினில் கொடுத்து மாவாக அரைத்துக் கொள்ளவும்.

என்னென்ன தேவை?

மேல் மாவிற்கு...

கோதுமை மாவு - 1/2 கப்,
மிக்ஸ்டு நவ சிறுதானியம் மாவு - 1 கப்,
உப்பு - தேவைக்கு,
நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்.

ஸ்டஃப்பிங்க்கு...

துருவிய காலி ஃப்ளவர் - 1 கப்,
நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்,
பச்சைமிளகாய் - 2,
உப்பு - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

3/4 கப் நீரை கொதிக்க வைத்து, கொதிக்கும் பொழுது கேப்பை மாவு, உப்பு, நல்லெண்ணெய் சேர்த்து கிளறி மூடி வைக்கவும். மாவு கை பொறுக்கும் சூட்டுக்கு வந்ததும் கோதுமை மாவு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். துருவிய காலிஃப்ளவரை வெந்நீரில் அலசி வடிகட்டி கொத்தமல்லித்தழை, பச்சைமிளகாய், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

மாவை சம அளவு உருண்டைகளாக உருட்டி, இரண்டு உருண்டைகளை தனித்தனியாக 3 அங்குல அகலத்தில் சப்பாத்தியாக இடவும். ஒரு சப்பாத்தியின் நடுவில் 2 டேபிள்ஸ்பூன் ஸ்டஃப்பிங்கை சுற்றிலும் 1/4 அங்குல இடைவெளி விட்டு பரப்பி, மற்றொரு சப்பாத்தியை அதன் மீது வைத்து ஓரங்களில் சிறிது தண்ணீர் தடவி ஒன்றோடு ஒன்றை சேர்த்து ஒட்டி விடவும். நன்றாக மூடியதும் மாவில் புரட்டி கையால் தட்டி மெதுவாக பெரிய கனமான சப்பாத்தியாக திரட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு இருபுறமும் நன்கு வெந்து பொன்னிறமாக வந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.