நட்ஸ் டிரை ஃப்ரூட்ஸ் பரோட்டா



என்னென்ன தேவை?

மேல் மாவிற்கு...

கோதுமை மாவு - 2 கப்,
உப்பு - தேவைக்கு.

ஸ்டஃப்பிங்க்கு...

உடைத்த நட்ஸ் பாதாம், முந்திரி, பிஸ்தா, வால்நட் - தலா 1/4 கப்,
பொடித்த உலர்ந்த பேரீச்சம்பழம், அத்திப்பழம் - தலா 1/4 கப்,
வெல்லம் - 100 கிராம்,
நெய் - 1/2 கப்,
ஏலக்காய்த்தூள் - சிறிது,
நெய்/எண்ணெய் - தேவைக்கு.
 
எப்படிச் செய்வது?

மேல் மாவிற்கு கொடுத்ததை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரைமணி நேரத்திற்கு மூடி ஊற விடவும். கடாயில் நெய் விட்டு சூடானதும் நட்ஸ், டிரை ஃப்ரூட்ஸை வறுத்து, ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறவும். மற்றொரு கடாயில் வெல்லத்தை பாகாக காய்ச்சி நட்ஸ் கலவையை சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி இறக்கவும். மாவை சம அளவு உருண்டைகளாக உருட்டி, பூரி அளவிற்கு திரட்டி நட்ஸ் கலவையை வைத்து நன்றாக மூடி கையால் தட்டி மெதுவாக திரட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு நெய் விட்டு இருபுறமும் நன்கு வெந்து பொன்னிறமாக வந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.