தாபா ஸ்டைல் ஆலு பரோட்டா



என்னென்ன தேவை?

மேல் மாவிற்கு...

கோதுமை மாவு - 1 கப்,
மைதா மாவு - 1/4 கப்,
உப்பு - தேவைக்கு.

ஸ்டஃப்பிங்க்கு...

உருளைக்கிழங்கு - 1/4 கிலோ,
கரம்மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்,
பச்சைமிளகாய் - 4,
பூண்டு - 2 டேபிள்ஸ்பூன்,
ஒமம் - 1/2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

மேல் மாவிற்கு கொடுத்ததை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரைமணி நேரத்திற்கு மூடி ஊற விடவும். உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும். இத்துடன் பச்சைமிளகாய், உப்பு, கரம்மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை, ஒமம் சேர்த்து கிளறவும். மாவை சமஅளவு உருண்டைகளாக பிரித்து உருட்டி, பூரி அளவிற்கு திரட்டி உருளைக் கலவையை வைத்து நன்றாக மூடி கையால் தட்டி மெதுவாக திரட்டவும்.

அதன் மேல் பூண்டை தூவி திரட்டவும். பரோட்டாவின் பின்புறம் தண்ணீர் தடவி, சூடான தோசைக் கல்லில் போட்டு லேசாக அழுத்தி வேகவைக்கவும். மேல்பக்கம் லேசாக வெந்ததும், தவாவை திருப்பி பரோட்டாவை நேரடியாக தீயில் காட்டி வேகவைக்கவும். நெய் அல்லது வெண்ணெய் தடவி பரிமாறவும்.