நிலக்கடலை ஜூஸ்



என்னென்ன தேவை?

நிலக்கடலை - 1 கைப்பிடி அளவு,
வாழைப்பழம் - 1,
பேரீச்சம் பழம் - 5,
தேன் - 2 டீஸ்பூன்,
முந்திரி - 4,
தேங்காய்த்துருவல் - 3 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

நிலக்கடலையை 6 மணி நேரம் ஊறவைத்து, அதனுடன் வாழைப்பழம், பேரீச்சம் பழம், முந்திரி, தேங்காய்த்துருவல் சேர்த்து அரைத்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நைசாக அரைக்கவும். தேவையானால் வடிகட்டி அல்லது அப்படியே தேன் கலந்து பரிமாறவும். மிக மிக சத்தான ஜூஸ். வாழைப்பழத்திற்கு பதில் ஆப்பிள், மாம்பழம், சப்போட்டா, கொய்யாப்பழம் சேர்த்து தயாரிக்கலாம்.