இஞ்சி ஜூஸ்



என்னென்ன தேவை?

நன்கு முற்றிய இஞ்சி - 100 கிராம்,
சர்க்கரை - 1/2 கிலோ,
எலுமிச்சைப்பழம் - 8 அல்லது 10,
சிட்ரிக் ஆசிட் - 1 டீஸ்பூன்,
ஏலம் - 8, கிராம்பு - 8,
துளசி - 1 கைப்பிடி,
உப்பு - 1 டீஸ்பூன்,
கேசரி பவுடர் - 1/4 டீஸ்பூன்,
வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

இஞ்சியை தோல் சீவி கழுவி, தண்ணீரில் 2 மணி நேரம் ஊறவைக்கவும். பின் அந்த தண்ணீருடன் சேர்த்து அரைத்து தண்ணீரை தெளிய வைக்கவும். ஏலம், கிராம்பு பவுடர் செய்து கொள்ளவும். துளசியை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் சர்க்கரை, 200 மி.லி. தண்ணீர் சேர்த்து லேசான கம்பி பாகாக காய்ச்சி கொண்டு இறக்கவும். பாகு ஆறியதும், இஞ்சியின் தெளிந்த சாறு, ஏலத்தூள், கிராம்பு தூள், உப்பு, கேசரி பவுடர், எலுமிச்சைப் பழச்சாறு, துளசி சாறு அனைத்தும் சேர்த்து கலந்து பாட்டிலில் நிரப்பி கொள்ளவும். தேவைப்
படும் பொழுது தண்ணீர் கலந்து பரிமாறவும்.