லெமன் பார்லி ஜூஸ்



என்னென்ன தேவை?

எலுமிச்சைப் பழச்சாறு - 250 மி.லி.,
தண்ணீர் - 300 மி.லி.,
சர்க்கரை -750 மி.லி.,
பார்லி பவுடர் - 10 கிராம்,
விரும்பினால் லெமன் மஞ்சள் ஃபுட் கலர் - சிறிதளவு,
லெமன் எசென்ஸ் - 1 டேபிள்ஸ்பூன்,
சோடியம் பென்சோயேட் - 1/2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

எலுமிச்சைப்பழத்தை பிழிந்து சாறு எடுத்து, துளி உப்பு போட்டு வைக்கவும். சோடியம் பென்சோயேட்டை வெந்நீரில் கரைத்து வைக்கவும். பாத்திரத்தில் சர்க்கரையையும், தண்ணீரையும் அடுப்பில் வைத்து லேசான கம்பி பாகு பதத்திற்கு காய்ச்சி இறக்கி ஆறவிடவும். மற்றொரு பாத்திரத்தில் பார்லி பவுடரில் சிறிது தண்ணீர் விட்டு குழைத்து, அடுப்பில் கஞ்சி போல் காய்ச்சி, சர்க்கரைப்பாகுடன் கலந்து வடிகட்டி ஆறவைக்கவும்.

பின்பு எலுமிச்சைச்சாறுடன் கலந்து, எசென்ஸ், லெமன் கலர், கரைத்த சோடியம் பென்சோயேட் அனைத்தையும் கலந்து பாட்டிலில் பத்திரப்படுத்தி தேவையான பொழுது தண்ணீர் கலந்து பரிமாறவும். ஒரு மாதம் வரைக்கும் கெடாது. மிக மிக தரமான, சத்தான பானம்.