ட்ரை கலர் ஜூஸ்



என்னென்ன தேவை?

கேரட் - 2,
முட்டைகோஸ் - 3 இலை (50 கிராம்),
சாத்துக்குடி - 2,
சர்க்கரை - 100 கிராம்,
உப்பு - ஒரு சிட்டிகை,
இஞ்சி - 1/4 இன்ச் துண்டு.

எப்படிச் செய்வது?

கேரட்டை கழுவி தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும். சாத்துக்குடியை ஜூஸ் எடுத்துக் கொள்ளவும். மிக்சியில் கேரட், முட்டைகோஸ், சர்க்கரை, உப்பு, இஞ்சி சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின் வடிகட்டி சாத்துக்குடி ஜூஸ் கலந்து குளிரவைத்து பரிமாறவும்.