செம்பருத்தி ஜூஸ்
என்னென்ன தேவை?
ஒற்றை இதழ் சிவப்பு செம்பருத்தி - 4, இஞ்சி - 2 இன்ச் அளவு, வெல்லம் அல்லது பனங்கற்கண்டு - ருசிக்கேற்ப, எலுமிச்சைப்பழம் - 1/2 மூடி, வெந்நீர் - 1 டம்ளர்.
எப்படிச் செய்வது?
எலுமிச்சைப் பழத்தை சாறு பிழிந்து கொள்ளவும். வெந்நீரில் செம்பருத்தி பூ, துருவிய இஞ்சி, பனங்கற்கண்டு சேர்த்து ஊறவைக்கவும். பின் வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு சேர்த்து வடிகட்டி பரிமாறவும்.
|