தாகம் தணிக்க...



வெயிலோடு நாம் விளையாட வேண்டிய நேரம் வந்தாச்சு. ஆம்! மார்ச் மாத வெயில் காய்ச்ச துவங்கி விட்டது. வெயிலையும் தாகத்தையும் தணிக்க உடலுக்கு தீங்கு செய்யும் செயற்கை பானங்களுக்கு இனி ‘நோ’ சொல்லுங்கள். இதோ, உடலின் நீர்ச்சத்தை பாதுகாத்து, உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துகளையும் தந்து நம்மை காக்கும் 30 வகை காய்கறி மற்றும் பழரசங்களை கற்றுத் தருகிறார் சமையல் கலைஞர் திருமதி உஷா லஷ்மணன்.

சுவையான இந்த பானங்களில் சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையை குறைத்தோ தவிர்த்தோ தேவையான அளவு அருந்தலாம் என்கிறார் உஷா. இவர் தனது ‘காந்தர்வ்’கலைக்கூடத்தின் மூலமாக 17 வருடங்களுக்கு மேலாக ஓவியம், கைவினைப்பொருட்கள், சமையல், கர்நாடக சங்கீதம் போன்ற கலைகளை பயிற்சி அளித்து வருகிறார். டிவி, வானொலி, பத்திரிகைகளிலும் கைவினைப்பொருட்கள் மற்றும் சமையல் பயிற்சிகளை அளித்து வருகிறார் உஷா.

தொகுப்பு: ஸ்ரீதேவிமோகன்
எழுத்து வடிவம்: கே.கலையரசி
படங்கள்: ஆர்.கோபால்

சமையல் கலைஞர்
உஷா லஷ்மணன்