உருளைக்கிழங்கு புதினா கோப்தா கறி



என்னென்ன தேவை?
 
கோப்தா செய்ய...
 
உருளைக்கிழங்கு - 4,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
பனீர் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1,
புதினா இலை - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

அரைக்க...
 
பூண்டு - 5 பற்கள்,
தனியா, சீரகம் - தலா 1 டீஸ்பூன்,
கசகசா - 1/2 டீஸ்பூன்,
இஞ்சி - 1/2 அங்குலத்துண்டு,
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்.
 
கிரேவி செய்ய...
 
நறுக்கிய வெங்காயம் - 2,
தக்காளி - 3,
தயிர் - 1/4 கப்,
மஞ்சள்தூள் - சிறிது,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
மாங்காய்த்தூள் (amchur) - 1/2 டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிது.
 
எப்படிச் செய்வது?
 
கோப்தா...
 
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்து கொள்ளவும். இத்துடன் மிளகாய்த்தூள், புதினா, வெங்காயம், பனீர் துருவல், உப்பு சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக செய்து சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுத்து கொள்ளவும்.
 
கிரேவி...
 
அரைக்க கொடுத்த பொருட்களை விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை விட்டு காய்ந்ததும் வெங்காயம், தக்காளியை போட்டு வதக்கி உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள், மாங்காய்த்தூள் போட்டு வதக்கி, அரைத்த விழுது, தேவையான தண்ணீர் விட்டு தயிர் சேர்த்து ெகாதிக்க விடவும். கொதி வந்ததும் கோப்தா உருண்டைகளை போட்டு கிளறி இறக்கவும். கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும்.