உருளைக்கிழங்கு இனிப்பு பஜ்ஜி
என்னென்ன தேவை? பெரிய உருளைக்கிழங்கு - 2, பொடித்த சர்க்கரை - 1/2 கப், கேசரி பவுடர் - சிறிது, பொரிக்க எண்ணெய் - தேவைக்கு, ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை, ரவை - 1/2 கப், மைதா - 1/2 கப், தேங்காய்ப்பால் அல்லது பால் - மாவு பிசைய தேவையான அளவு.
எப்படிச் செய்வது? உருளைக்கிழங்கை நன்றாக கழுவி வட்ட வடிவமாக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும், ரவை, ஏலக்காய்த்தூள், மைதா, கேசரி பவுடர், சர்க்கரைத்தூள், தேங்காய்ப்பால் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். இதில் உருளைக்கிழங்கை போட்டு முக்கி எடுத்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து பரிமாறவும்.
|