கதம்ப சிறுதானிய சூப்
என்னென்ன தேவை?
குதிரை வாலி, வரகு, சாமை, தினை - 100 கிராம், தேங்காய்ப்பால் - 1 கப், பொடியாக நறுக்கிய பூண்டு - 4 பல், மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப, கறிவேப்பிலை - சிறிதளவு, நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், நறுக்கிய பச்சைமிளகாய் - 2, சின்ன வெங்காயம் - 10, சீரகம் - 1/2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
அனைத்து சிறுதானியங்களையும் கழுவி சுத்தம் செய்து தண்ணீரில் ஊறவைத்து அரைக்கவும். தானியங்கள் ஊறிய தண்ணீரோடு அப்படியே அடுப்பில் வைத்து கஞ்சிப் பதத்திற்கு வரும்வரை வேக விடவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு சீரகம், பச்சைமிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வேக வைத்த கலவையை ஊற்றி கொதிக்க விடவும். பிறகு தேங்காய்ப்பால் ஊற்றி இறக்கவும். தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சூடாக பரிமாறவும். இத்துடன் விருப்பமான காய்கறிகளையும் சேர்க்கவும்.
|