மூங்கில் அரிசி பாயசம்



என்னென்ன தேவை?

மூங்கில் அரிசி - 100 கிராம்,
நாட்டுச் சர்க்கரை - 250 கிராம்,
முழு தேங்காய் - 1,
ஏலக்காய் - 30 கிராம் (பொடிக்கவும்),
முந்திரி - 30 கிராம்,
திராட்சை - 20 கிராம்,
பாசிப் பருப்பு - 30 கிராம்,
நெய் - 3 டேபிள்ஸ்பூன்,
நறுக்கிய தேங்காய் - சிறிது.

எப்படிச் செய்வது?

மூங்கிள் அரிசியை 5 மணி நேரத்திற்கு ஊறவைத்து வடித்து, மிக்சியில் கொரகொரப்பாக அரைக்கவும். தேங்காயை அரைத்து தேங்காய்ப்பால் எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தில் மூங்கில் அரிசி, பாசிப் பருப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும். பின்பு நாட்டுச் சர்க்கரை, தேங்காய்ப்பால் சேர்க்கவும். பாயசம் பதத்திற்கு வந்ததும், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, நறுக்கிய தேங்காய், ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து அலங்கரித்து பரிமாறவும். சுவையான மூங்கில் அரிசி பாயசம் ரெடி.