முத்து தோசைஎன்னென்ன தேவை?
 
பச்சரிசி - 1/2 கப்,
ஜவ்வரிசி - 1 கப்,
புளித்த தயிர் - 1 கப்,
பச்சைமிளகாய் - 2,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை,
புதினா-  சிறிது,
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?
 
அரிசியை 2 மணி நேரம் ஊறவைக்கவும். ஜவ்வரிசையை புளித்த தயிரில் 2 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய அரிசியுடன், பச்சைமிளகாய், உப்பு சேர்த்து நைசாக அரைத்தெடுக்கவும். அந்த மாவுடன் தயிரோடு ஜவ்வரிசி கலவையை சேர்த்து, பெருங்காயத்தூள், கொத்தமல்லித்தழை, புதினாவையும் சேர்த்து தோசைகளாக ஊற்றி நிதானமாக வார்த்தெடுத்து பரிமாறவும். முத்து முத்தாக பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.