கலர்ஃபுல் தோசைஎன்னென்ன தேவை?
 
பச்சரிசி - 2 கப்,
புழுங்கலரிசி - 2 கப்,
உளுத்தம்பருப்பு - 1/2 கப்,
வெந்தயம் - 1 டீஸ்பூன்,
உப்பு- தேவைக்கு,
மிகவும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 1 கப்,
பொடியாக துருவிய (கேரட் - 1 கப், பீட்ரூட் - 1 கப்),
பொடியாக துருவிய முள்ளங்கி அல்லது பெரிய வெங்காயம் - 1 கப்,
எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?
 
பச்சரிசி, புழுங்கலரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் இவற்றை 2 மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து அரைத்து 5 மணி நேரம் புளிக்க வைக்கவும். பிறகு மாவை நான்கு பாகங்களாக பிரித்து, ஒவ்வொரு பாகத்திலும் ஒவ்வொரு காயை சேர்க்கவும். சற்று தடிமனான சிறு தோசைகளாக தனித்தனியாக சுட்டெடுக்கவும். நான்கு கலர் தோசைகளையும் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி பரிமாறவும். இதற்கு தொட்டுக் கொள்ள எள்ளு மிளகாய்பொடி நன்றாக இருக்கும்.
 
எள்ளு மிளகாய் பொடி

என்னென்ன தேவை?

எள் - 1 கப்,
எண்ணெய் - 1/4 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 1/4 கப்,
கடலைப்பருப்பு - 1/4 கப்,
காய்ந்தமிளகாய் - 6,
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.
 
எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் எள்ளை போட்டு பொரியும் வரை வறுத்தெடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்தமிளகாய் ேசர்த்து வறுத்து, பெருங்காயத்தூள், உப்பு, வறுத்த எள்ளு சேர்த்துப் பொடிக்கவும்.