நவதானிய தோசை



என்னென்ன தேவை?
 
பாசிப்பயறு - 1/4 கப்,
கருப்பு உளுத்தம்பருப்பு - 1/4 கப்,
கொண்டைக்கடலை - 1/4  கப்,
பச்சரிசி - 1/4 கப்,
துவரம்பருப்பு - 1/4  கப்,
கொள்ளு - 1/4 கப்,
சோயா - 1/4  கப்,
வெள்ளை சோளம் - 1/4  கப்,
எள்ளு - 1 டேபிள்ஸ்பூன்,
பச்சைமிளகாய் - 3,
காய்ந்தமிளகாய் - 6,
இஞ்சி - 1 துண்டு,
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது.

எப்படிச் செய்வது?
 
எல்லா தானியங்களையும் ஒன்றாக போட்டு நன்றாகக் களைந்து 5 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறியதும் தண்ணீரை வடித்து தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய், காய்ந்தமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும். நறுக்கிய கொத்தமல்லித்தழையை சேர்த்து மெல்லிய தோசைகளாக வார்த்தெடுத்து சூடாக பரிமாறவும்.