வரகு வாழைப்பூ அடை



என்னென்ன தேவை?
 
நறுக்கிய வாழைப்பூ - 1 கப்,
வரகு அரிசி - 1 கப்,
உளுந்து - 1/4 கப்,
கடலைப்பருப்பு - 1/4 கப்,
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 3,
பச்சைமிளகாய் - 3,
கடுகு - 1/4 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - சிறிது,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது,
துருவிய தேங்காய் - 4 டீஸ்பூன்,
இஞ்சி - சிறிது,
உப்பு - தேவையான அளவு,
நல்லெண்ணெய் - 50 மி.லி.

எப்படிச் செய்வது?
 
அரிசி, கடலைப்பருப்பை ஒன்றாக ஊறவைத்து, உளுந்தை தனியே ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு போட்டு தாளித்ததும், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, பச்சைமிளகாய், வெங்காயம், இஞ்சி போட்டு வதக்கவும். பின் வாழைப்பூவை சேர்த்து கிளறி விடவும். பிறகு தேங்காய்த்துருவல், உப்பு போட்டு கிளறி அதை அரைத்த மாவுடன் சேர்த்து கலந்து, மஞ்சள் தூள் சேர்த்து தோசைக்கல்லில் அடையாக ஊற்றி நல்லெண்ணெய் ஊற்றி சுட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.