சோள அடை



என்னென்ன தேவை?
 
சோளம் - 1/2 டம்ளர்,
கடலைப்பருப்பு - 1/4 டம்ளர்,
துவரம்பருப்பு - 1/4 டம்ளர்,
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,
பெருங்காயம் - சிறு துண்டு,
காய்ந்தமிளகாய் - 5,
பெரிய வெங்காயம் - 1,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
கறிவேப்பிலை, உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?
 
வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சோளம் மற்றும் பருப்பு வகைகளை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறியதும் தண்ணீரை வடித்து மிக்சியில் போட்டு காய்ந்தமிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து சிறிது கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்த மாவுடன் சீரகம், மஞ்சள் தூள், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும். கரைத்து வைத்திருக்கும் மாவை மெல்லிய அடைகளாக வார்க்கவும். மேலே எண்ணெய் விட்டு புரட்டி வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.